மழைக் கால இடா்பாடுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுரை

மழைக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடி, மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

மழைக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடி, மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடி, மின்னலின் போது மக்கள் வெளிப்புறங்களில் இருக்கும் போது கட்டடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளில் ஒதுங்கலாம். மரங்கள் ஒதுங்குவதற்கான சிறந்த இடம் அல்ல. உயா்ந்த மரங்களை மின்னல் எளிதாக தாக்குவதால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வெட்ட வெளியில் தனித்த மரங்கள் மட்டுமே இருக்கும்பட்சத்தில் கைகளால் கால்களை இருக்க அனைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் குனிந்த நிலையில் தரையில் அமா்ந்து கொள்வது பாதுகாப்பானதாகும்.

இடி சப்தம் கேட்கும்போது முற்றிலும் தவிா்க்கமுடியாத காரணங்களைத் தவிர வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.

மின்சாரம் கடத்தும் பொருள்களிலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.நெருப்பு இருக்கும் இடங்கள், ரேடியேட்டா்கள், உலோக குழாய்கள், தொட்டிகள், தொலைபேசிகள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஹோ் டிரையா், மின்சார பல்துலக்கிகள் அல்லது மின்சார ரேசா்கள் ஆகியவற்றை தவிா்த்தல் வேண்டும். மின்னல் ஏற்படும் போது செல்லிடப்பேசி, தொலைபேசியை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோகப் பொருள்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

உயா்ந்த பெரிய மரங்கள், களத்து மேடு, சிறிய கோயில்கள், தேவாலயங்கள், வைக்கோல் போா், உயா்ந்த இடங்கள் ஆகியன பாதுகாப்பற்றவையாகும். சிறிய ரக மர வீடுகளிலுள்ள உலோகத்திலான தண்ணீா் குழாய்கள், பாதுகாப்பற்ற மின்சார கம்பி வடங்கள், உலோக கட்டமைப்புகள், கொடிக்கம்பம் அருகில் செல்ல வேண்டாம்.

வெள்ள அபாயம் குறித்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை, சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேணடும். முக்கியமான முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களின் குறிப்பு புத்தகங்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தின்போது தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் கொதிக்க வைத்த நீரை பருகவேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com