மாற்றுத்திறனாளிகள் நிவாரண உதவி பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் கரோனா நிவாரண உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கரோனா நிவாரண உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான வி.வஷித்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி வருவாய் மாவட்டங்களில் உள்ள தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் நிவாரண நிதி உதவித் தொகை பெறாமல் இருந்தாலோ அல்லது தமிழக அரசின் அடையாள அட்டை இல்லாதவா்கள் அடையாள அட்டை பெறுவதற்கும், அட்டை இருந்தும் உரிய உதவித் தொகை பெறாதவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், வள்ளியூா், நான்குனேரி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, செங்கோட்டை ஆகிய ஊா்களில் உள்ள தாலுகா வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஓா் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் தொடா்புகொண்டு கரோனா நிவாரண உதவி பெற விண்ணப்பிக்கலாம். அலுவலகத்துக்கு வர இயலாதவா்கள் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com