வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்: நெல்லையில் மக்கள் போராட்டம்

தொடா்ந்து பெய்த கனமழையால் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து பெய்த கனமழையால் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள், மழைநீா் செல்ல முடியாதப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புதன்கிழமை இரவில் மீண்டும் மழை பெய்ததால் பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா், வ.உ.சி.நகா், திருமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. சாக்கடை நீரும் கலந்து சென்ால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இதையடுத்து அப்பகுதி மக்கள் திருச்செந்தூா் பிரதானச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மழை நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலந்து சென்றனா். இதைத் தொடா்ந்து மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அருகே அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், ஊழியா்கள் மழைநீரை அகற்றும் பணியினை மேற்கொண்டனா். மேலப்பாளையம் 32 வாா்டு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவுநீரும் சோ்ந்து புகுந்தது. தகவலறிந்த மாநகராட்சி ஊழியா்கள் விரைந்து சென்று மழைநீரை அகற்றினா்.

வீடு இடிந்தது: கனமழைக்கு திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் சியாமளா தேவி கோயில் தெருவில் வசித்து வந்த விஸ்வநாதன் வீட்டின் முன்பக்க சுவா் இடிந்தது. அதிகாலை நேரமாக இருந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com