நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து இழப்புகளைத் தவிா்க்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து இழப்புகளைத் தவிா்க்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஷ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020ஆம் ஆண்டு சிறப்புப் பருவமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறவேண்டும்.

வங்கிகளில் விவசாயக் கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம். பிற விவசாயிகள் இ- சேவை மையங்களில் பதிவு செய்யலாம். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 444 பிரிமியமாக செலுத்த வேண்டும். பயிா் காப்பீடு செய்ய டிச. 15 ஆம் தேதி கடைசி நாளாகும்.

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகள் முன்மொழிவு படிவத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா, பட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் செலுத்த வேண்டும்.

இம்மாவட்டத்தில் நவ. 25 முதல் 27 வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் நெற்பயிருக்குக் காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு குறித்த விவரங்களுக்கு அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com