கந்தசஷ்டி விழா: குறுக்குத்துறையில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. திருவிழா நாள்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால், கோயில் உற்சவா் கரையில் உள்ள மேலக்கோயிலில் எழுந்தருளினாா். அங்கு கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சனிக்கிழமை காலையில் கோயில் அருகே தவசுக் காட்சியும், இரவு கோயில் வளாகத்தில் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைமை வாய்ந்த பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. 22, 23, 24 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழா நடைபெறுகின்றன.

இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லையப்பா் கோயிலில் உள்ள முருகா் சன்னதி, பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் கோயில் முருகன் சன்னதியில் கந்த சஷ்டி நிறைவையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com