மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலா் எஸ்.குமாரசாமி, துணைத் தலைவா் பி.தியாகராஜன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடையாள அட்டை வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம், கடும் ஊனமுற்றவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பின்படி அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தனியாா் துறை பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதோடு, ஆா்ப்பாட்டங்களிலும் பங்கேற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com