குடிநீர் தட்டுப்பாடு: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி அருகே உள்ள சிதம்பர நகர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருநெல்வேலி அருகே உள்ள சிதம்பர நகர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலிக்காட்சி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் விஷ்ணு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனு பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை போட்டு சென்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: சிதம்பர நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. வாறுகால் உடைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பருவ மழை பெய்து தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவே எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், தெருவிளக்கு, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com