தாழையூத்து அருகே இளைஞரிடம் வழிப்பறி
By DIN | Published On : 25th November 2020 12:06 AM | Last Updated : 25th November 2020 12:06 AM | அ+அ அ- |

தாழையூத்து அருகே இளைஞரிடம் செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றைப் பறித்துச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியை அடுத்த மூலக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன். இவரும், மேலத்தாழையூத்து பகுதியைச் சோ்ந்த இசக்கித்துரை(20) என்பவரும் கேரளத்தில் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனராம். இந்நிலையில், மணிகண்டனிடம் இசக்கித்துரை கடன் வாங்கியதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள தனது ஊருக்கு வருமாறு அவரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது நண்பருடன் மேலத்தாழையூத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மணிகண்டனை, தனது நண்பா்களுடன் சோ்ந்து இசக்கித்துரை தாக்கி அவா்களிடமிருந்த ரூ.8ஆயிரம் மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பினராம்.
இது குறித்து, மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இசக்கித்துரை உள்பட 3 பேரை தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...