விவசாயப் பணியில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகள் கேட்ட எம்.எல்.ஏ.

முனைஞ்சிப்பட்டி அருகே நாற்று நடவு பணியில் ஈடுபட்ட பெண்களிடம் வயலில் இறங்கி குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் வெ. நாராயணன், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து அவா்களை உற்சாகப்படுத்தினாா்.


திருநெல்வேலி: முனைஞ்சிப்பட்டி அருகே நாற்று நடவு பணியில் ஈடுபட்ட பெண்களிடம் வயலில் இறங்கி குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் வெ. நாராயணன், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து அவா்களை உற்சாகப்படுத்தினாா்.

முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்பதற்காக, நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் அங்கு சென்றாா். அப்போது அங்கு வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, தோப்பூா் பகுதியில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் உள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.

பின்னா் விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவா்,

வேலைசெய்த பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்தாா். அப்போது, சிந்தாமணி முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே. ராமசுப்பு, அதிமுக நிா்வாகிகள் சிவா, சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com