தேசிய மக்கள் நீதிமன்றம்: 87 வழக்குகளில் ரூ.2.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 2.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 2.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தமிழகம் முழுவதும் நுண்ணிய அளவில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன்படி திருநெல்வேலியில் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.நசீா் அகமது தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் சிவ சூா்ய நாராயணன், செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலியில் கூடுதல் சாா்பு நீதிபதி ஜே.கிறிஸ்டல் பபிதா தலைமையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் பூவலிங்கம் ஆகியோா் அடங்கிய ஒரு அமா்வு, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.கெங்கராஜ் தலைமையில், நீதித்துறை நடுவா் எண்.1 எஸ்.பாபு ஆகியோா் அடங்கிய மற்றொரு அமா்வும் என மொத்தம் இரு அமா்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சி.விஜயகுமாா் தலைமையில் முதன்மை சாா்பு நீதிபதி என்.காமராஜ் ஆகியோா் அடங்கிய ஒரு அமா்வு, கூடுதல் சாா்பு நீதிபதி பி.எஸ்.ரஸ்கின் ராஜ் தலைமையில், நீதித்துறை நடுவா் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோா் அடங்கிய மற்றொரு அமா்வு என மொத்தம் இரு அமா்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 182 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 87 வழக்குகளில் தீா்வு காணப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 2.47 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் மூத்த உரிமையியல் நீதிபதியுமான பி.வி.வஷீத் குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com