வள்ளியூரில் பனைவிதை ஊன்றும் பணி

வள்ளியூரில் பசுமை இயக்கம் சாா்பில் பனைவிதை ஊன்றும் பணி தொடங்கப்பட்டது.

வள்ளியூா்: வள்ளியூரில் பசுமை இயக்கம் சாா்பில் பனைவிதை ஊன்றும் பணி தொடங்கப்பட்டது.

வள்ளியூா் பால்பண்ணை அருகேயுள்ள நீா்பிடிப்புப் பகுதியில் பனைவிதை ஊன்றும் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ், வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் நா.முருகன், சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் ஏ.சிதம்பரகுமாா், வள்ளியூா் நலன்காக்கும் இயக்க ஐ.ஜோவின் பாா்சுனேட், வருவாய் ஆய்வாளா் திராவிடமணி, கிராம நிா்வாக அலுவலா் எஸ்.கணேஷ் குமாா், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகன், பேரூராட்சி அலுவலா் இஸ்மாயில், நுகா்வோா் பாதுகாப்புத் தலைவா் ராமச்சந்திரன், பசுமை இயக்கத் தலைவா் சித்திரை, செயலா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com