முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மூன்றாண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
By DIN | Published On : 04th October 2020 01:36 AM | Last Updated : 04th October 2020 01:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுவிட்டன.
இந்நிலையில் மூன்றாண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியிலும் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் தங்களது சாதிச்சான்றிதழ் நகலுடன் ரூ.250 கட்டணம் செலுத்தியும், இதர மாணவா்கள் ரூ.500 வங்கியில் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க இம் மாதம் 28ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.