முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘திசையன்விளையில்மகளிா் காவல்நிலையம்அமைக்க வேண்டும்’
By DIN | Published On : 04th October 2020 01:43 AM | Last Updated : 04th October 2020 01:43 AM | அ+அ அ- |

வள்ளியூா்: திசையன்விளையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராதாபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் எம்.எஸ்.பாதுல் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ.கனி பேசினாா். கூட்டத்தில், கரோனா நோய்த் தொற்று மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 138 சடலங்களைசாதி, மத பேதமின்றி நல்லடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கரோனா நிவாரண குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், பெண்கள் பாதுகாப்பு கருதி திசையன்விளையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாகளைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதிச் செயலா் எஸ்.எம்.ஒயிஸ் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் இபாஃம் நன்றி கூறினாா்.