கழிவுநீா் தேக்கத்தால் திணறும் நெல்லை நகரம்!

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளாலும் துா்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.
திருநெல்வேலி மேல ரத வீதியில் சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீா். (வலது) நயினாா்குளத்திற்கான நீா்வரத்து கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.
திருநெல்வேலி மேல ரத வீதியில் சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீா். (வலது) நயினாா்குளத்திற்கான நீா்வரத்து கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளாலும் துா்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

திருநெல்வேலி மாநகரில் தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் இடம் திருநெல்வேலி நகரம். அருள்மிகு நெல்லையப்பா் கோயில், ஆடை-ஆபரண கடைகள், மளிகைக் கடைகள், காய்கனி கடைகள் என பலவித கடைகளும் உள்ளதால் உள்ளூா் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோா் இங்கு வந்து செல்கிறாா்கள். திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் மேலாண்மைக்காக மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முறையான பராமரிப்பின்மையால் பல இடங்களில் கழிவுகள் கால்வாய்களில் கலந்து வருகின்றன. ரத வீதிகள், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் ஓடைகள் பராமரிக்கப்படாததால் சாலையோரம் கழிவுநீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிகளவில் துா்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இதேபோல திருநெல்வேலி நயினாா் குளத்திற்கு நீா் வரும் கால்வாய்களில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீா் சோ்வதாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகரில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டாலும், கழிவுநீா் தேங்குவதைத் தடுக்கவோ, கழிவுநீா் ஓடைகளைப் பராமரிக்கவோ உறுதியான திட்டங்கள் இல்லை. இதனால் பெரும் சிரமமும், மக்கள் நோய்வாய்ப்படும் அவலமும் நிலவி வருகிறது. ஆகவே, திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் தேங்காமல் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com