கதா் கிராம தொழில் வாரியத்தின் நடமாடும் கடையில் சிறப்பு விற்பனை

திருநெல்வேலி கதா் கிராம தொழில் வாரியத்தின் நடமாடும் கடையின் மூலம் வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி நகரம் பகுதியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கதா் கிராம தொழில் வாரியத்தின் நடமாடும் கடையின் மூலம் வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி நகரம் பகுதியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்தின் சாா்பில் நடமாடும் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருநாள் இந்த வாகனத்தின் மூலம் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலிக்கு இந்த வாகனம் செவ்வாய்க்கிழமை வந்தது. வண்ணாா்பேட்டையில் நண்பகல் வரையும், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் அருகே இரவு வரையும் சிறப்பு விற்பனை நடைபெற்றது. தொடா்ந்து தென்காசி மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு புதன்கிழமை (அக். 14) காசிவிஸ்வநாதா் கோயில் அருகே சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மக்களிடம் கதா் ஆடைகள், நெசவாளா்களின் பட்டுகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆடை ரகங்கள் மட்டுமன்றி பனைவெல்லம், பனைவெல்லப் பொருள்கள், குளியல் சோப்பு வகைகள், சந்தனமாலை, மூலிகை பல்பொடி, ஜவ்வாது பவுடா், தேன் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் ரூ.40 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com