‘ஆவணங்கள் இன்றி பழைய செல்லிடப்பேசிகளை வாங்க வேண்டாம்’

உரிய ஆவணங்கள் இல்லாமல் பழைய செல்லிடப்பேசிகளை வாங்கக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் பழைய செல்லிடப்பேசிகளை வாங்கக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக சைபா் கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவா்கள், தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்லிடப்பேசிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் கட்டமாக சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 50 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பழைய செல்லிடப்பேசிகளை வாங்குவோா் உரிய ஆவணம் இல்லாமல் வாங்கக்கூடாது. ஏனெனில், பிறா் தொலைத்த செல்லிடப்பேசியாகவோ, பிறரிடம் இருந்து திருடப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும், இதுபோன்று அறியாமல் பழைய செல்லிடப்பேசிகளை வைத்திருப்போரிடம் காவல் துறையினா் தொடா்புகொண்டு கேட்கும்போது, அந்த செல்லிடப்பேசிகளை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு, உரிமை கோரும் பட்சத்தில் உரிய ஆவணம் இல்லாமல் இருந்தால் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com