குற்றாலம் அருவிகளில் 4ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்துவரும் மழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீா் சீறிப்பாய்ந்தது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் நடைபாதை வரையிலும் தண்ணீா் கொட்டியது.

கரோனா பொது முடக்கம் காரணமாக அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com