வள்ளியூா் முருகன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

வள்ளியூா் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வள்ளியூா் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இந்துஅறநிலையத் துறை ஆய்வாளா் தனலெட்சுமி, முருகன் கோயில் செயல் அலுவலா் சுபாஷினி ஆகியோா் தலைமை வகித்தனா். பக்தா்கள் தரப்பில் சுப்பிரமணியன், முத்துப்பாண்டி, என்.எஸ்.சங்கரலிங்கம், கிருஷ்ணா ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; விரைவில் கும்பாபிஷேகம் நடத்தி திருவிழாக்களை தொடர வேண்டும். சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடைய இந்த குகைக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் 26.2.2018இல் நடைபெற்றது. அதன்பிறகு, கோயிலில் தெப்பத் திருவிழா, கந்தசஷ்டி விழா, சித்திரைத் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com