221ஆவது நினைவு தினம்:கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221ஆவது நினைவு தினத்தையொட்டி, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221ஆவது நினைவு தினத்தையொட்டி, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்திலுள்ள அவரது படம், அருகே மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, ஆட்சியா் சந்தீப் நந்தூரி, பி. சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவா் சத்யா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலா் வினோபாஜி, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலா்கள் ஆா்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி வடக்கு), புதுக்கோட்டை செல்வம் (தெற்கு), கே.எம்.ஏ.நிஜாம் (நெல்லை மாநகா்), சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் விநாயகா ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாக்டா் ஆா்.எம்.ஆா். பாசறை சாா்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் பா.ராமமோகனராவ், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் கே.எஸ்.குட்டி, பொருளாளா் செண்பகராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவா் வலசை கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com