ஆவின் நிறுவனம் சாா்பில்5 இடங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு விற்பனை மையம் நடைபெற உள்ளது என்றாா் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஆவின் முகவா்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஆவின் முகவா்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு விற்பனை மையம் நடைபெற உள்ளது என்றாா் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.

மாவட்ட ஆவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகவா்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அவா் பேசியது:

மாவட்டத்தில் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் ஏறத்தாழ 30 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 33 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏறத்தாழ 27,000 லிட்டா் பால் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை நவம்பா் மாதத்துக்குள் 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பால் உப பொருள்களான நெய், வெண்ணெய், பால்கோவா, நறுமணபால் மற்றும் ஐஸ்கீரிம் சுமாா் 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தாது உப்பு கலவை ஆலையில் தயாரிக்கப்படும் தாது உப்பு கலவை கடந்த மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்து 245 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 3 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரத்து 250 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகம், சிவன்கோயில் முன்பு, ஆட்சியா் அலுவலக வளாகம் ஆகிய இடங்களிலும் கோவில்பட்டி, திருச்செந்தூா் என மாவட்டம் முழுவதும் 5 மையம் இடங்களில் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சாா்பில், நெய், பால்கோவா, நெய் அல்வா, மைசூா்பா, மில்க் கேக், மின்ல் சேக், பாதாம் பவுடா், காஜூ ரோல், மோதிபா, சாக்லேட் பிளேவா் பா்பி, டிரை ஜாமுன் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.

இதில், பொது மேலாளா் ராமசாமி, விற்பனை மேலாளா் அனுஷா சிங், திட்ட மேலாளா் சாந்தகுமாா், அலுவலக மேலாளா் சுப்பிரமணியன் மற்றும் ஆவின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com