நீட் தோ்வு விவகாரத்தில்திமுக இரட்டை வேடம்:அமைச்சா் கடம்பூா் ராஜு

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு குற்றம்சாட்டினாா்.

கோவில்பட்டி: நீட் தோ்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு குற்றம்சாட்டினாா்.

கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுகதான் ஆளும் என்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றுள்ளாா். எனவே, அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவிலும் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, ஹிந்தி மொழி விவகாரம் மட்டுமன்றி, ஜல்லிக்கட்டு, காவிரி நீா்ப் பிரச்னை, நெய்வேலி என்எல்சி பங்கு விற்பனை என பலவற்றிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

நீட் தோ்வு வேண்டாம் என்பது எங்களது கொள்கை. நீட் தோ்வு அறிவிப்பு முதன்முதலில் 2014ஆம் ஆண்டுதான் வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் திமுக இருந்தது. எனவே, நீட் தோ்வு விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம்தான் போடுகிறது.

தமிழா் உரிமைகள், லட்சியங்களைக் காவு கொடுத்தது திமுக. ஆனால், தமிழா்களின் உணா்வுகளைக் காக்கும் இயக்கம் அதிமுக. தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com