நெல்லையப்பா் கோயில் நவராத்திரி விழா நிகழ்வுகளை இணையதளத்தில் காண ஏற்பாடு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் நவராத்திரி நிகழ்வுகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் நவராத்திரி நிகழ்வுகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் கோயிலில் நிகழாண்டு நவராத்திரித் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இந்நிகழ்வுகள் இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய உற்சவ மூா்த்திகள் கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, நாள்தோறும் முற்பகல் 11 மணியளவில் அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சிறப்புத் தீபாராதனை நடைபெறும்.

அபிஷேகம், தீபாராதனைகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை. மற்ற நேரங்களில் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூா்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டுள்ள கொலுவைப் பாா்வையிடவும் அனுமதிக்கப்படுவா்.

உற்சவமூா்த்திகளுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளின் படத்தொகுப்பு, காணொலித் தொகுப்பைள் செயலி மூலமாக கண்டு அருள்பெறலாம். இணையதள முகவரியில் முந்தைய தின நிகழ்வுகளையும் காணலாம்.

மேலும், திருவிழாவையொட்டி, அம்மன் சந்நிதியில் காந்திமதி அம்பாளுக்கு இம்மாதம் 31ஆம் தேதிவரை நாள்தோறும் மாலை 6 மணிக்கு லட்சாா்ச்சனை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com