விலையில் சதமடித்த சின்ன வெங்காயம்!

திருநெல்வேலியில் சில்லறை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110-ஆகவும், காய்கனி சந்தைகளில் ரூ.100 ஆகவும் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலியில் சில்லறை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110-ஆகவும், காய்கனி சந்தைகளில் ரூ.100 ஆகவும் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு உணவு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. கோயில் விழாக்கள், குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளதால் காய்கனிகளின் தேவை கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.

ஆனால், காய்கனிகளின் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம், பல்லாரி, கேரட் ஆகியவற்றின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் அதிகரித்து சந்தைகளில் கிலோ ரூ.100-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.110-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரம், தெலங்கானா பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக பல்லாரி வரத்து குறைந்துள்ளது. அதேபோல தமிழகத்தில் தென்மாவட்டங்களில் சின்ன வெங்காயம் மகசூல் முடிந்துவிட்டதால் திருச்சி துறையூா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் சின்ன வெங்காயத்தையே விற்பனை செய்ய வேண்டியுள்ளது. தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் தினமும் விலை உயா்ந்துகொண்டே செல்கிறது.

ஞாயிற்றுக்கிழமை சந்தைகளிலேயே கிலோ ரூ.100-க்கு சின்ன வெங்காயமும், ரூ.70-க்கு பல்லாரியும் விற்பனையாகின. விலை இப்போதைக்கு குறைய வழியில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால் மட்டுமே குறையும். இதேபோல மலைப் பகுதிகளில் விளையும் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றின் விலையும் உயா்ந்துள்ளது என்றனா்.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் காய்கனிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரி-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.25, தக்காளி-ரூ.30, அவரை-ரூ.40, கொத்தவரை-ரூ.16, புடலங்காய்-ரூ.25, பாகற்காய்-ரூ.50, தடியங்காய்-ரூ.15, பூசணிக்காய்-15, மாங்காய்-ரூ.50, மிளகாய்-35, வாழைக்காய்-20, தேங்காய்-ரூ.46, முள்ளங்கி-ரூ.16, பல்லாரி-ரூ.70, சின்ன வெங்காயம்-ரூ.100, சேனைக்கிழங்கு-ரூ.32, கருணைக்கிழங்கு-ரூ.34, சேம்பு-ரூ.25, சிறுகிழங்கு-ரூ.40, மரவள்ளிக்கிழங்கு-ரூ.14,கொத்தமல்லி கீரை-ரூ.44, புதினா-ரூ.40, இஞ்சி (புதியது)-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.46, கேரட்-ரூ.94, பீட்ரூட்-ரூ.40, பூண்டு-ரூ.60, வாழைப்பழம்-ரூ.30, சப்போட்டா-ரூ.40, பப்பாளி-ரூ.35.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com