தாமிரவருணி ஆற்றில்இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 20th October 2020 06:17 AM | Last Updated : 20th October 2020 06:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா். அவரது உடலில் காயம் எதுவும் இல்லை எனவும், சுமாா் 38 முதல் 40 வயதுக்குள் இருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.