கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி: சிறப்பிடம் பெற்றோருக்கு எஸ்பி பாராட்டு
By DIN | Published On : 21st October 2020 07:14 AM | Last Updated : 21st October 2020 07:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.
திருநெல்வேலி ஊரக உள்கோட்ட பகுதியில் பணிபுரியும் காவலா் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அவா்களுக்கு வீட்டிலிருந்தபடியே கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்து அனுப்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, கடந்த 15ஆம் தேதி இப்போட்டி நடைபெற்றது. இதில் 23 மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் கலந்துகொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.