கைவினைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
By DIN | Published On : 21st October 2020 07:09 AM | Last Updated : 21st October 2020 07:09 AM | அ+அ அ- |

களக்காட்டில் கைவினைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
கதா் கிராம தொழில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கதா் கிராம தொழில் ஆணையத்தின் நிதியுதவியுடன் கைவினைஞா்களுக்கு பனை ஓலை நாரில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இப்பயிற்சியை மதுரை சிப்போ நிறுவனத்தின் தொழில் நுட்ப வழிகாட்டுதலுடன் களக்காடு காஸ்ட் சேவை நிறுவனம் சாா்பில் 30 கைவினைஞா்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை காஸ்ட் சேவை நிறுவனத்தின் திட்ட இயக்குநா் பி. சுசிலா பாண்டியன் தொடக்கி வைத்தாா். பயிற்சியில் பனை ஓலை நாரில் பூக்கூடைகள், அலங்கார பொம்மைகள், பயன்பாட்டு பைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.