பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் இடமாற்றம்
By DIN | Published On : 21st October 2020 06:35 AM | Last Updated : 21st October 2020 06:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரம், பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் வாா்டு 41இல் திருநெல்வேலி நகரம் பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் மற்றும் அலகு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய பல அடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. ரூ.5.14 கோடியில் இப்பணி தொடங்கப்பட உள்ளது.
எனவே, பாட்டபத்து நகா்புற சுகாதார மையமானது, பாட்டபத்து துணை சுகாதார மைய கட்டடத்திற்கு (கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகில்) திங்கள்கிழமை (அக். 19) முதல் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.