அம்பை தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு
By DIN | Published On : 23rd October 2020 07:28 AM | Last Updated : 23rd October 2020 07:28 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் பேரவை தொகுதியில் பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள்அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன், ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான அனுமதி ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனிடம், சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். அப்போது, அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ், சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் எஸ்.ஏ.ஜி. சகாய சாந்தி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலா் ஆா்.எம். வெங்கட்ராமன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.