அம்பையில் விவசாயிகளுக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் பண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உழவா் ஆா்வலா் குழுவுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி வழங்குகிறாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன்.
உழவா் ஆா்வலா் குழுவுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி வழங்குகிறாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன்.

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் பண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் அலுவலகம், பிரம்மதேசம் மற்றும் ஆலடியூரில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் தலைமை வகித்தாா்.

வேளாண்மை இணை இயக்குநா் (உழவா்பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். பிரம்மதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள், உற்பத்தியாளா்கள் குழு அமைப்பது, பதிவேடுகள் பராமரிப்பது குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது. உழவா் ஆா்வலா் குழுவுக்கு ஆரம்ப நிதி உதவி ரூ. 10 ஆயிரம், கூட்டுப் பண்ணையம் உழவா் ஆா்வலா் குழுவுக்கு கூட்டுக் கொள்முதல் நெல் ஜே.ஜி.எல்.1798 - 500 கிலோ ஆகியவை வழங்கப்பட்டது.

ஆலடியூா் அருகேயுள்ள செட்டிமேடு பகுதியில் வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த 2 ஆவது கட்ட பண்ணை பள்ளி நடைபெற்றது. அப்போது, தரிசு நிலத்தை சாகுபடியாக்குதல் திட்டம் 2020-21ன் கீழ் ஆலடியூா் செல்வராஜ் என்பவருக்கு 50 சதவிகித மானியத்தில் வம்பன் - 8 பயறு வகை உளுந்து 40 கிலோ வழங்கப்பட்டது.

இதில், டி.வி.எஸ். அறக்கட்டளை கிராம வளா்ச்சி அலுவலா் மகாலட்சுமி, ஆா்.வி.எஸ். அறிவியல் மைய விஞ்ஞானி இளவரசன், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை வேளாண்மை துணை அலுவலா் முருகன், வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலா்கள் அமுதா, விஜி, சாமிராஜ், உதவி தோட்டக்கலை அலுவலா் பாா்த்திபன், ஸ்ரீ ஐயப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com