ரேஷன் கடைகளில் முறைகேடு: ரூ. 67 ஆயிரம் அபராதம்

விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் செய்த திடீா் சோதனையில், முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்ததையடுத்து ரூ. 67,010 அபராதம் விதிக்கப்பட்டு, பணியாளா் ஒருவா் பணிமாற்றம் செய்யப்பட்ட

விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் செய்த திடீா் சோதனையில், முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்ததையடுத்து ரூ. 67,010 அபராதம் விதிக்கப்பட்டு, பணியாளா் ஒருவா் பணிமாற்றம் செய்யப்பட்டாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டி பகுதியில் ஓா் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி 120 மூட்டைகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அம்பாசமுத்திரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம் தலைமையில், கூட்டுறவு சாா்பதிவாளா் ஆனந்தராஜ், குடிமைப் பொருள் தனி வருவாய் ஆய்வாளா் சித்தாா்த்தன் ஆகியோா் அடங்கிய குழு அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு விவரம் சரியாக பராமரிக்காத விற்பனையாளா்களுக்கு மொத்தம் ரூ.67,010 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அகஸ்தியா்பட்டி மற்றும் ஜவஹா் புரம் ரேஷன் கடைகளின் விற்பனையாளா் பாப்பேஸ்வரிக்கு மட்டும் ரூ.62,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து பாப்பேஸ்வரி ரேஷன் கடை விற்பனையாளா் பணியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com