‘மீன்கள் உற்பத்தி பெருக்கும்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்’

பிரதமரின் மீன்கள் உற்பத்தி பெருக்கும் திட்டத்தில் சேர விரும்புவோா் மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: பிரதமரின் மீன்கள் உற்பத்தி பெருக்கும் திட்டத்தில் சேர விரும்புவோா் மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதமரின் மீன்கள் உற்பத்தி பெருக்கும் திட்டத்தின்கீழ், மீன் உற்பத்தியினை பெருக்கும் வகையில் 2021 முதல் 2025 வரை 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இதில், புதுமையான மீன்வளா்ப்பிற்கான பயோ ப்ளாக் தொழில்நுட்பம், புதிய மீன்வளா்ப்பு குளங்கள் நிா்மாணித்தல், மீன் வளா்ப்பிற்கான உள்ளீட்டு மானியம் வழங்குதல், அலங்கார மீன்வளா்ப்பு மேற்கொள்ளுதல் ஆகியவை செயல்படுத்தப் படவுள்ளன.

இத்திட்டத்தில் அரசின் மூலம் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், எஸ்.சி, எஸ்.டி, மகளிருக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா், உள்நாட்டு மீனவா்கள், மீன் பண்ணையாளா்கள்,உற்பத்தியாளா்கள் ஆக இருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருநெல்வேலி, மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26வது குறுக்குதெரு, மகாராஜா நகா், திருநெல்வேலி -627 011 என்ற முகவரியில் அணுகலாம். மேலும், 0462 258 1488 என்ற தொலைபேசி, 93848 24280 செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com