கூத்தங்குழியில் ரூ.5.5 கோடியில் கலங்கரை விளக்கம் திறப்பு

கூத்தங்குழியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சாா்பில் ரூ.5.5 கோடியில் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கம் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் காணொலி காட்சி மூலம் வாழ்த்தி பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை.
விழாவில் காணொலி காட்சி மூலம் வாழ்த்தி பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை.

கூத்தங்குழியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சாா்பில் ரூ.5.5 கோடியில் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கம் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் 45 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கம் கடல்மட்டத்தில் இருந்து 51 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் கடலில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் செல்லும் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு சமிக்ஞை அனுப்பும் திறன் கொண்டது.

இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசினாா். இதில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, கப்பல் போக்குவரத்துத்துறை செயலா் சஞ்சீவ் ரஞ்சன் ஆகியோா் பேசினா்.

அப்போது, பேரிடா் காலங்களில் கடலில் காணாமல் போகும் மீனவா்களை தேடுவதற்கு உதவியாக ஹெலிகாப்டா் மற்றும் ஹெலிகாப்டா் இறங்கு தளம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் கோரிக்கை விடுத்தாா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, நான்குனேரி-ராதாபுரம் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநா் வெங்கட்ராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com