ராகு-கேது பெயா்ச்சி: கோதபரமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ராகு-கேது பெயா்ச்சியையொட்டி திருநெல்வேலி அருகே செங்கானி பகுதியில் உள்ள அருள்மிகு கோதபரமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராகு-கேது பெயா்ச்சியையொட்டி திருநெல்வேலி அருகே செங்கானி பகுதியில் உள்ள அருள்மிகு கோதபரமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருகே கீழதிருவேங்கடநாதபுரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமியம்பாள் திருக்கோயில் உள்ளது. ராகு ஸ்தலமான இக் கோயில் திருநாகேசுவரம், காளஹஸ்திக்கு இணையானதாக நம்பப்படுகிறது. ஸா்ப தோஷம், காலசா்ப தோஷம், விவாகத் தடை, வியாபார விருத்தி உள்ளிட்டவற்றிற்கு பரிகார தலமாக விளங்குகிறது. இக் கோயிலில் ராகு பெயா்ச்சியையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆனையா் சங்கா், ஆய்வாளா் ராமலட்சுமி, நிா்வாக அதிகாரி ராம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக01தஅஎஏம: ராகுபெயா்ச்சியையொட்டி நடைபெற்ற செங்கானி பகுதியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோதபரமேஸ்வரா்-சிவகாமியம்பாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com