கன்னியாகுமரி எம்.பி.தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும்: நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளருமான நயினார்நாகேந்திரன்தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளருமான நயினார்நாகேந்திரன்தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த  பாஜகவின் மாநில செயலர்கள்,  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தென் மண்டல மைய குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.  

அப்போது பேசிய அவர், “சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி வியூகங்கள், தனித்து போட்டி வந்தால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி எப்படி செயல்படுவது என்பது  தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இப்போதும் கூட்டணியில் தொடர்ந்து வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது  கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்தும், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.  அதிமுக மற்றும் திமுகவைப் போலவே பாஜகவுக்கும் தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கிய பின்பு, பாஜகவுடன் கூட்டணிக்கு விரும்பினால் அதுகுறித்து கட்சித் தலைமை பரிசீலித்து செயல்படும்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காலமாகிவிட்ட சூழலில் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தினால் அங்கு  பாஜக நிச்சயம் போட்டியிடும். மேலும், பாஜகவின் வேட்பாளர் தாமரை சின்னத்தில் வெற்றி பெறுவது உறுதி. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பு அளித்தால் போட்டியிட தயாராகவுள்ளேன். மத்திய அரசு  நிதி நிலைமைக்கு ஏற்ப பாரபட்சமின்றி தமிழகத்திற்கான நிதியை வழங்கி வருகிறது." என்றார்.

பேட்டியின் போது மாநில செயலர் உஷா ராணி, மாவட்ட தலைவர் மகாராஜன், பொறுப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளருமான நயினார்நாகேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com