அணைக்கரை புனித பிரகாசியம்மாள் ஆலய திருவிழா
By DIN | Published On : 08th September 2020 11:37 PM | Last Updated : 08th September 2020 11:37 PM | அ+அ அ- |

திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தல திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.
இவ்வாலய திருவிழா கடந்த ஆக. 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் உள்ளிட்டவை நடைபெற்றன.
8ஆம் திருநாளில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ரவிபாலன் தலைமையில் நற்கருணை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.
9 மற்றும் 10ஆம் திருவிழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆராதனை, ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனா்.