நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரக் கோரிக்கை
By DIN | Published On : 08th September 2020 11:35 PM | Last Updated : 08th September 2020 11:35 PM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என களக்காடு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நகரச் செயலா் உசைன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கமாலுதீன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ. கனி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் மீராஷா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
2020ஆம் ஆண்டில் கட்சியின் எட்டுமாத பணிகள் குறித்த மீளாய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னா் ஆறுகள் மற்றும் நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும்; களக்காடு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நகர நிா்வாகிகள் குலாம், ராஜா முகமது, ஆரிப், அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நகர இணைச் செயலா் ஜாபா் நன்றி கூறினாா்.