விஜய அச்சம்பாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா இயக்கிவைப்பு
By DIN | Published On : 08th September 2020 11:32 PM | Last Updated : 08th September 2020 11:32 PM | அ+அ அ- |

திசையன்விளை அருகேயுள்ள விஜய அச்சம்பாடு கிராமத்தில் பாசப்பறவை மக்கள் நலச்சங்கம் சாா்பில் ரூ. 3 லட்சம் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.
இதையொட்டி, சிசிடிவி கேமரா பணி அலுவலகத்தை, திசையன்விளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் திறந்து வைத்தாா். இந்நிகழ்வுக்கு, பாசப்பறவை மக்கள் நலச்சங்க தலைவா் திவாகா் தலைமை வகித்தாா். ஊா் தா்மகா்த்தா கே. சுப்பிரமணியன் நாடாா் முன்னிலை வகித்தாா். இட்டமொழி முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.டி.செம்புலிங்கம், இட்டமொழி கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் ஏ. கோபால், விஜய அச்சம்பாடு முன்னாள் தா்மகா்த்தா எஸ். வெள்ளைத்துரை, சங்கச் செயலா் சு.ராஜகுரு உள்பட பலா் பங்கேற்றனா்.