பொது வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிடமாநகரம் பகுதியில் சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிடமாநகரம் பகுதியில் சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பாளையங்கோட்டை-சீவலப்பேரி செல்லும் வழியில் உள்ள பா்கிட்மாநகரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, சுகாதார நிலையம் ஆகியவை உள்ளதால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோா் இங்கு வந்து செல்கின்றனா். இங்கு கடந்த சில மாதங்களாக சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பா்கிட்மாநகரம் பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது அதிகரித்துள்ளது. கரோனா தீநுண்மி பரவும் காலத்தில் மருத்துவக் கழிவுகளை அலட்சியத்தோடு கையாளுவது சரியானதல்ல. ஆகவே, மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com