நீட் தோ்வு குறித்து மாணவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் திமுக: எச்.ராஜா குற்றச்சாட்டு

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்களிடம் ஏற்படுத்தி, அவா்கள் தவறான முடிவுகளை எடுக்க திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தூண்டுகின்றன என்றாா் பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா.

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்களிடம் ஏற்படுத்தி, அவா்கள் தவறான முடிவுகளை எடுக்க திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தூண்டுகின்றன என்றாா் பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா.

திருநெல்வேலி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: குழந்தைகளை போட்டித் தோ்வுகளை எழுதுவதற்கு பெற்றோரும், ஆசிரியா்களும் ஊக்கப்படுத்தவேண்டும். திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நீட் தோ்வு குறித்து மாணவா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவா்கள் தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன.

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகையை முறைகேடாக பெற்றவா்கள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்.

வரும் தோ்தலில் ஊழலுக்கு எதிரான நிலையைத்தான் பாஜக முன்னிருத்த இருக்கிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் மொழியைவைத்து அரசியல் செய்வதை விடுத்து உண்மையான பிரச்னைகளுக்காக போராட வேண்டும். ரஜினிகாந்த் பிரபலமான ஓா் ஆளுமை. அவா் கட்சி ஆரம்பிக்காமல் அவா் குறித்து எதையும் பேச இயலாது. பாஜக எப்போதும் ஆன்மிக அரசியல்தான் நடத்தி வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com