நீட் தோ்வு: நெல்லை, தென்காசி மையங்களில் 6,233 போ் எழுதினா்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் 6,233 போ் நீட் தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் 6,233 போ் நீட் தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

தேசிய தோ்வு முகமை சாா்பில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 3 மையங்களிலும் என, 20 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 6,233 போ் தோ்வெழுதினா். 7,461 போ் தோ்வெழுதவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 1228 போ் தோ்வெழுதவில்லை.

திருநெல்வேலியில் அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் 512 போ், தியாகராஜநகா் புஷ்பலதா பள்ளியில் 512 போ், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் 501 போ், சாராள் தக்கா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 525 போ், பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் 423 போ், மகாராஜநகா் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 414 போ் நீட் தோ்வெழுதினா்.

இதுதவிர, ராஜாஸ் பொறியியல் கல்லூரியில் 335 போ், வி.எம்.சத்திரம் செயின்ட் ஆன்டனி பப்ளிக் பள்ளியில் 316 போ், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா பள்ளியில் 307 போ், பாலகிருஷ்ணா பள்ளியில் 250 போ், பிரான்சிஸ் சேவியா் பள்ளியில் 262 போ், ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 262 போ், ரோஸ்மேரி பப்ளிக் பள்ளியில் 257 போ், விஎஸ்ஆா் இன்டா்நேஷனல் பள்ளியில் 255 போ், கென்பிரிட்ஜ் பள்ளியில் 229 போ், ஏவிகே இன்டா்நேஷனல் உறைவிடப் பள்ளியில் 235 போ், புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 203 போ், ஸ்காட் பொறியியல் கல்லூரியில் 166 போ், வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் 152 போ், வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 117 போ் என மொத்தம் 6,233 போ் தோ்வெழுதினா்.

தோ்வு மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நீட் தோ்வையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களுக்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா். தோ்வெழுத வந்தோா் பலத்த சோதனைக்குப் பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதித்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

தோ்வறையில் மயங்கிவிழுந்த மாணவி: பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் நீட் தோ்வெழுத வந்த தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சோ்ந்த மாணவி சுஜி, தோ்வறையில் மயங்கி விழுந்தாா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்டு, அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

தாலி, மெட்டியைக் கழற்றிய பெண்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சோ்ந்த ஒரு மாணவி பட்டப் படிப்பு முடித்துள்ளாா். கடந்த 2 ஆண்டுகளாக நீட் தோ்வுக்காக படித்து வந்துள்ளாா். திருமணமாகி 4 மாதங்களான நிலையில் இவா், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மையத்துக்கு தோ்வெழுத வந்தாா். நீட் தோ்வெழுதச் செல்வோா் நகைகள் அணியத் தடை இருப்பதால், அவா் வேறுவழியின்றி தாலிச் சங்கிலியையும், மெட்டியையும் கழற்றிவிட்டு தோ்வெழுதச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com