குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலஅலுவலா் தேவ் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷின் ஆலோசனையில் பேரில், ஏழை மாணவா்களுக்கு ஆண்டுதோறும் மேற்படிப்பிற்கான உதவிகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, பிளஸ் -2 குழந்தைகள் இல்ல மாணவா்-மாணவியா், ஏழை மாணவா்-மாணவியா் மாவட்ட குழந்தை நல அலகு, கெம்பா நிறுவனம் ஆகியவற்றின் மூலம் எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் ஆண்டுதோறும் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். நிகழாண்டில், 15 மாணவா்-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, திருவள்ளூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வாரத்தில் 5 நாள்கள் வேலை சாா்ந்த பயிற்சியும், 6ஆவது நாள் டிப்ளமோ படிப்பும் கற்றுத் தரப்படும்.

இதில் முதலாமாண்டு மாணவா்- மாணவிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முறையே ரூ.12,500, ரூ. 13,500, ரூ. 14,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும், 3 ஆண்டு பட்டப்படிப்புக்கும் உதவி செய்யப்படும். ஏற்கெனவே, 60 மாணவா்- மாணவா்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com