பூக்கள் வரத்து அதிகரிப்பு: விற்பனை மந்தம்

திருநெல்வேலி பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விற்பனை மந்தகதியிலேயே உள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விற்பனை மந்தகதியிலேயே உள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனா்.

கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25 ஆம் தேதிமுதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளா்வுகளுடன் இம் மாதம் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் இ-பாஸ் இன்றி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், கோயில்களில் பொது வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக திருநெல்வேலியில் மலா் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மானூா், சிவந்திப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலா் சாகுபடி செய்த விவசாயிகள் விற்பனைக்கு வழியின்றி வயல்களிலேயே போட்டு உரமாக்கினா். இந்நிலையில், ஆவணி மாதத்தின் தொடக்கத்தில் சுபநிகழ்ச்சிகள் அதிகரிப்பால் விற்பனை அதிகரித்தது. அதனால் வயல்களிலிருந்து பூக்களை மொத்தமாக பறித்து சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவருவது அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொதுமுடக்கத்தால் பூ வணிகம் முற்றிலும் குறைந்த நிலையில், இப்போது தளா்வுகளால் ஓரளவு விற்பனையாகி வருகிறது. ஆவணி கடைசி வாரம் ஆகிவிட்டதால் முகூா்த்த நாள்கள் ஒரு சிலவே உள்ளன. புரட்டாசியில் சனிக்கிழமைகளைத் தவிர மற்ற நாள்களில் பூக்கள் விற்பனை அதிகரிக்காது. இப்போது பூக்கள் வரத்து மிகவும் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது என்றனா்.

பூக்களின் செவ்வாய்க்கிழமை விலை விவரம் (ஒரு கிலோவுக்கு) மல்லிகைப்பூ-ரூ.400, பிச்சி-ரூ.300, கேந்தி-ரூ.30, கோழிக்கொண்டை-ரூ.40, சம்பங்கி-ரூ.150, ரோஜா-ரூ.150, துளசி-ரூ.7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com