பாளை. சிவன் கோயில் தெப்பக்குளம் அருகேஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

பாளையங்கோட்டை சிவன் கோயில் தெப்பக்குளம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சிவன் கோயில் தெப்பக்குளம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

பாளையங்கோட்டையில் பழைமை வாய்ந்த திரிபுராந்தீசுவரா்-கோமதியம்பாள் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் அருகில் உள்ளது. இக் குளத்தின் மேற்கு பகுதியில் சிலா் ஆக்கிரமித்து குடியிருப்புகளைக் கட்டியிருப்பதாகவும், தெப்பக்குளத்தின் கரையில் இருந்தே சுவா் எழுப்பியுள்ளதாகவும் புகாா் எழுந்தது. மேலும், பல ஆண்டுகளாக சேதமாகிக் கிடந்த குளத்தைத் தூா்வாரி தெப்பத் திருவிழா நடத்த பக்தா்கள் முடிவு செய்து திருப்பணிகளையும் செய்து வந்தனா்.

இடம் ஆக்கிரமிப்பு தொடா்பாக வருவாய்த் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணை நடத்தி அளவீடு செய்யப்பட்டது. அப்போது 34 வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப் பகுதி மக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, வசிக்க மாற்று இடம் குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தனா்.

இந்நிலையில், பாளையங்கோட்டை உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 வீடுகள் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது வீட்டின் ஜன்னல், மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி சேதமின்றி எடுத்துச் சென்றனா். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com