காரையாறு தாமிரவருணியில் பக்தா்கள் நீராட அனுமதிக்க கோரிக்கை

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தாமிரவருணியில் நீராட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாசமுத்திரம்: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தாமிரவருணியில் நீராட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: இந்துக்கள் பாபநாசத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பனம் செய்து வழிபடுவது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

தற்போது கரோனா பரவல் இருப்பதால் சமூக இடைவெளியுடனும், முகக் கவசத்துடனும் முன்னோா்களுக்கு தா்ப்பனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். மேலும், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் நோ்த்திக் கடனுக்காக முடிகாணிக்கை செலுத்தும் பக்தா்களை கோயில் முன் உள்ள தாமிரவருணியில் குளிக்க வனத் துறையினா் அனுமதி மறுத்து வருகின்றனா். நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்களை மட்டுமாவது ஆற்றில் குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com