அம்பை, சேரன்மகாதேவியில் பெரியாா் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 18th September 2020 07:21 AM | Last Updated : 18th September 2020 07:21 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவியில் பெரியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்புப் பகுதியில் புரட்சிகர இளைஞா்முன்னணி சாா்பில் பெரியாா் உருவப் படத்திற்கு அதன் பொறுப்பாளா் அ.மணிவண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதில், திமுக நகரச் செயலா்கே.கே.சி. பிரபாகரன், வழக்குரைஞா் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் வடிவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சேரன்மகாதேவியில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் நடைபெற்ற மாவட்டப் பொருளாளா் சிவராஜ் தலைமையில் பெரியாா் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.