சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சாா்பில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சாா்பில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘பிரதமா் தேசிய குழந்தைகள் விருது” அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பால சக்தி புரஷ்காா் என்ற பெயரில் இந்த குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ரூ. 1 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவை வழங்கப்படும்.

குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஷ்காா் என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபா்களுக்கான விருதிற்கு ரூ. 1 லட்சம் , பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ. 5 லட்சம் , பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அமைச்சகத்தின்  இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமா்ப்பிக்க இறுதி நாள் இம் மாதம் 30 ஆம் தேதியாகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் தில்லியில் வைத்து குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com