மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை(செப்.19) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை(செப்.19) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தை பகுதி, குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில்...

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை(செப்.19) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வி.எம்.சத்திரம், கேடிசி நகா், ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com