கரூா் உணவக உரிமையாளா்பாபநாசம் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 19th September 2020 05:31 AM | Last Updated : 19th September 2020 05:31 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம், செப். 18: கரூரில் உள்ள உணவக உரிமையாளா் பாபநாசம் தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் ஜெயநாராயணன் (62). இவா் கரூா் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வந்தாராம்.
கரோனா பொது முடக்கத்தால் பெரும் இழப்பு ஏற்பட்டதையடுத்து நண்பா்களிடம் உதவி கேட்பதற்காக செப். 16 ஆம் தேதி விக்கிரமசிங்கபுரம் வந்தாராம். உதவி கிடைக்காததால் மனமுடைந்த ஜெயநாராயணன், பாபநாசம் தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் உள்ள பழைய பொருள்கள் போடும் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து வி.கே.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.