கால்நடை மருத்துவக் கல்லூரியில்புதிய கட்டடம் திறப்பு

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பெரிய விலங்குகளுக்கான உள்ளிருப்புப்பிரிவு கட்டடம், ஆள்கள் தங்கும் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பெரிய விலங்குகளுக்கான உள்ளிருப்புப்பிரிவு கட்டடம், ஆள்கள் தங்கும் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி முறையில் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன. இதில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.பழனிசாமி, தனுவாஸ் மருத்துவமனை மேலாண்மை குழு உறுப்பினா் பி.ரேமண்ட் பேட்ரிக், கால்நடை சிகிச்சையியல் வளாகத் தலைவா் இரா.ராம்பிரபு, துறை பேராசிரியா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com